Thursday, March 27, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 2 - பதில்கள்



குறுக்கெழுத்துப் புதிர் 2-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 3-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)

குறுக்காக:
4.நுனியும் அஞ்சனமும் இணைந்து முனை மழுங்காத தன்மை (3) - கூர் + மை = கூர்மை
5.பசு, முடியாத கிணறு, வீதி சேர்ந்து மருத்துவமனை (5) - பசு:ஆ, கிணறு:துரவு, வீதி:சாலை =ஆதுரசாலை
7.மாட்டுடன் ஒரு ஸ்வரம் சேர் முழுவதும் கிடைக்க (2) - ஆ ​+ க = ஆக
8.ஏற்ற நேரம் வருடத்தின் பகுதி (6) - பருவகாலம்
10.உலகத்துடன் பத்தினா கலந்து சேர்த்தால் வில்லாளனா? (6) - பார் ​ + பத்தினா = பார்த்திபனா
11.இச்சொல்லைக்கொண்டு முகத்துதியும் செய்யலாம், கடிந்தும் கொள்ளலாம் (2) - இந்த பதிலை தான் நிறைய நண்பர்கள் தவற விட்டிருந்தனர். சாடு
12.அளவுக்கு மீறி காசை வீணாக்குபவனா? (5) - செலவாளியா
14.கட்டிலில் தலையெடுத்து உறங்க தயாராகும் நிலையின் முன் சேர் சூது - க ​+ படு = கபடு

நெடுக்காக:
1.காண அவர் பாஞ்சாலத்தின் அமைச்சர் (6) - பார்க்கவர்
2.செவி திரும்பி கவிஞனாகவுள் நுழைந்தது மெய்காப்பாளனாக (7) - செவி:காது + கவிஞன்:பாவலன் =பாதுகாவலனாக
3.பல்லிளித்து இற சிவா (2) - ஈ ​+ இற:சா = ஈசா
6.உளி பகல் நதி கலந்ததால் பேராற்றில் சேர வரும் சிற்றாறுகளில் (7) - உபநதிகளில்
9.மூன்றில் இரண்டு பங்கு லட்டு, குலம், மணாளன் சேர்ந்து பணக்காரன்! (6) - லட் + குலம்:சாதி + மணாளன்:பதி =லட்சாதிபதி
13.இடமல்ல திரும்பி சரித்திர நாயகனின் மகன் (2) - இட x வல =லவ

பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
பவளமணி பிரகாசம்
முத்து சுப்ரமண்யம்
ராமராவ்
ராஜேஷ் துரைராஜ்
மனு
நாராயணன் ராமையா
ராமசந்திரன் வைத்யநாதன்
யோசிப்பவர்
சந்தானம்
மாதவன் வரதாச்சாரி
சாந்தி நாராயணன்
சௌதாமினி சுப்ரமண்யம்
வாஞ்சிநாதன்
வடகரை வேலன்
சசி பாலு
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்

Monday, March 3, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 2

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/


அன்பு நண்பர்களே,
இதோ எனது இரண்டாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.



குறுக்காக:
4.நுனியும் அஞ்சனமும் இணைந்து முனை மழுங்காத தன்மை (3)
5.பசு, முடியாத கிணறு, வீதி சேர்ந்து மருத்துவமனை (5)
7.மாட்டுடன் ஒரு ஸ்வரம் சேர் முழுவதும் கிடைக்க (2)
8.ஏற்ற நேரம் வருடத்தின் பகுதி (6)
10.உலகத்துடன் பத்தினா கலந்து சேர்த்தால் வில்லாளனா? (6)
11.இச்சொல்லைக்கொண்டு முகத்துதியும் செய்யலாம், கடிந்தும் கொள்ளலாம் (2)
12.அளவுக்கு மீறி காசை வீணாக்குபவனா? (5)
14.கட்டிலில் தலையெடுத்து உறங்க தயாராகும் நிலையின் முன் சேர் சூது (3)

நெடுக்காக:
1.காண அவர் பாஞ்சாலத்தின் அமைச்சர் (6)
2.செவி திரும்பி கவிஞனாகவுள் நுழைந்தது மெய்காப்பாளனாக (7)
3.பல்லிளித்து இற சிவா (2)
6.உளி பகல் நதி கலந்ததால் பேராற்றில் சேர வரும் சிற்றாறுகளில் (7)
9.மூன்றில் இரண்டு பங்கு லட்டு, குலம், மணாளன் சேர்ந்து பணக்காரன்! (6)
13.இடமல்ல திரும்பி சரித்திர நாயகனின் மகன் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக