Monday, July 14, 2014

குறுக்கெழுத்து புதிர் - 6

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/


அன்பு நண்பர்களே,
இதோ எனது ஆறாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.



குறுக்காக:
1.குழம்பி மரபு குழம்பி செல்வந்தன் (5)
4.எல்லாம் காவல் செய் குளியா (3)
6.வறுமை கொண்ட உறுதி (3)
7.அங்கு செத்தா உயிர் நீங்கி கலந்து நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையா (5).
8.பாட்டி பாட்டிழந்து பழ சுற்றி தூளி (4)
9.செல் மக்கள் உணவு (4)
12.அணி நடுவில் சகரங்கள் சேர்ந்து மரவேலை செய்பவர் (5)
14.கனிந்து மெய்யில்லாமல் சேதம் (3)
16.ஆகாய நதி கங்கை (3)
17.யாழ் நரம்புகள் கொண்ட யானைக்கூட்டம் (5)

நெடுக்காக:
1.ஸ்வரம் நுழைந்த அறிவு வீணை (3)
2.பேச்சு வழக்கில் நிறைந்து கல் குழப்பத்தில் குச்சியால் தரப்படும் தண்டனை (5)
3.சிரிப்பின் முன்பாதி பண்ணு மானாவரி பயிர் (4)
4.குமுறு திருகி திருகு (3)
5.முழுமையில்லா அழகு மனைவி ஒரு ஸ்வரம் (5)
8.அந்த கிணறா (பேச்சு வழக்கில்) அகரம் ஓடி கலந்து தொல்லையா (5)
10.கூட்டம் லாயம் இணைப்பில் வருவாய் தீர்வாயம் (5)
11.ஸ்வரம் நுழைந்த தகரங்கள் அணிந்த (4)
13.இற மன்மதன் மனைவி புலவன் (3)
15.பந்து பல இறுதியில் தூசி (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments:

Post a Comment