Thursday, August 14, 2014

குறுக்கெழுத்து புதிர் - 7

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/


அன்பு நண்பர்களே,
இதோ எனது ஆறாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.



குறுக்காக:
4.கங்காதர் களி காந்தியாடை விட்டு கலந்ததால் யமுனைப் பாம்பு (5)
5.மெய்யிழந்த மகள் கலக்கத்தில் வேறுபாடு (3)
7.கம்மல் கொண்ட ஒரு வழியளவை முடியாமல் (2)
9.பாதி அரசன் தகரங்களுடன் விளையாடி அடைந்தது வேதமுடிவை (6)
10.அரை விவசாயி ஜதியுடன் கலந்து முடியாத அம்மன் சபிப்பு (4,2)
11.பிரம்மி திரும்பி குற்றவாளி (2)
12.சபை நடுவே கண்ணகி தலை பருவம் (3)
13.கலவை ஸ்வரம் நுழைந்த தூண்(5)

நெடுக்காக:
1.கோயில் காகம் பறந்த தக்காளி காய்(2)
2.வேல்களை பயில் கலங்கி சூரிய ஒளி இருக்கும் பொழுதில்(3,4)
3.தூய்மை கடை இல்லா இளையவன் போய் மொத்தம் சேர்ந்து போட்டியில் வென்றால் கிடைக்கும். (7)
6.உற்றார் உறவினர் நம்முடைய தீவர்த்தி (7)
8.இருக்க ஆண்பிள்ளை அபினவ் பிந்த்ரா இந்தியாவிற்கு (6)
14.பளிங்கு கொண்ட கல் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments:

Post a Comment