குறுக்கெழுத்துப் புதிர் 2-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 3-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)
குறுக்காக:
4.நுனியும் அஞ்சனமும் இணைந்து முனை மழுங்காத தன்மை (3) - கூர் + மை = கூர்மை
5.பசு, முடியாத கிணறு, வீதி சேர்ந்து மருத்துவமனை (5) - பசு:ஆ, கிணறு:துரவு, வீதி:சாலை =ஆதுரசாலை
7.மாட்டுடன் ஒரு ஸ்வரம் சேர் முழுவதும் கிடைக்க (2) - ஆ + க = ஆக
8.ஏற்ற நேரம் வருடத்தின் பகுதி (6) - பருவகாலம்
10.உலகத்துடன் பத்தினா கலந்து சேர்த்தால் வில்லாளனா? (6) - பார் + பத்தினா = பார்த்திபனா
11.இச்சொல்லைக்கொண்டு முகத்துதியும் செய்யலாம், கடிந்தும் கொள்ளலாம் (2) - இந்த பதிலை தான் நிறைய நண்பர்கள் தவற விட்டிருந்தனர். சாடு
12.அளவுக்கு மீறி காசை வீணாக்குபவனா? (5) - செலவாளியா
14.கட்டிலில் தலையெடுத்து உறங்க தயாராகும் நிலையின் முன் சேர் சூது - க + படு = கபடு
நெடுக்காக:
1.காண அவர் பாஞ்சாலத்தின் அமைச்சர் (6) - பார்க்கவர்
2.செவி திரும்பி கவிஞனாகவுள் நுழைந்தது மெய்காப்பாளனாக (7) - செவி:காது + கவிஞன்:பாவலன் =பாதுகாவலனாக
3.பல்லிளித்து இற சிவா (2) - ஈ + இற:சா = ஈசா
6.உளி பகல் நதி கலந்ததால் பேராற்றில் சேர வரும் சிற்றாறுகளில் (7) - உபநதிகளில்
9.மூன்றில் இரண்டு பங்கு லட்டு, குலம், மணாளன் சேர்ந்து பணக்காரன்! (6) - லட் + குலம்:சாதி + மணாளன்:பதி =லட்சாதிபதி
13.இடமல்ல திரும்பி சரித்திர நாயகனின் மகன் (2) - இட x வல =லவ
பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
பவளமணி பிரகாசம்
முத்து சுப்ரமண்யம்
ராமராவ்
ராஜேஷ் துரைராஜ் மனு
நாராயணன் ராமையா
ராமசந்திரன் வைத்யநாதன்
யோசிப்பவர்
சந்தானம்
மாதவன் வரதாச்சாரி
சாந்தி நாராயணன்
சௌதாமினி சுப்ரமண்யம்
வாஞ்சிநாதன்
வடகரை வேலன்
சசி பாலு
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்
No comments:
Post a Comment