குறுக்கெழுத்துப் புதிர் 5-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மிக விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 6-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)
குறுக்காக:
1.சகளைக்காக எருது ஓடி தேய்க்க (4) - எருது:காளை. சகளைக்காக - காளை = சகக்க ~ கசக்க
5.பெரிய பண்டிதர் அக்கா அரியர் இல்லாமல் கலங்கி பள்ளிக்கு செல்லாதவள் (5,2) பெரிய பண்டிதர் அக்கா - அரியர் = பெபண்டிதக்கா ~ படிக்காத பெண்
7.பாட்டுக்குள்ளே ஒரு ஸ்வரம் கூட்டி காடு (4) - பாட்டு:கானம் + க = கானகம்
8.அண்டம் தாவ அகரம் நீக்கி மாறுபட்டு நடனம் (5) - அண்டம் தாவ - அ = ண்டம்தாவ ~ தாண்டவம்
9.ஆதி போன அம்பலம் குழம்பிக் கொடுத்த செங்குத்துக்கோடு (4) - அம்பலம் - அ = ம்பலம் ~ லம்பம்
11.மலர் துவசம் இணைந்து பெண் பெயர் (4) மலர்:பூ + துவசம்:கொடி = பூங்கொடி
12.மகராசி சிரம் இருபத்தைந்தாம் ஆண்டு போய் ஒரு ராசி (5) - மகராசி சிரம் - கர:இருபத்தைந்தாம் ஆண்டு = மராசிசிம் ~ சிம்மராசி
14.ஆதி அந்தமில்லா ஒரு சிகரம் சுவாரசியமான (4) - ஒரு சிகரம் - ஒம் = ருசிகர
16.தாழ்வாரம் போன வடிவம்மா திரிகூடம் சிக்கலில் உதாரண உருவம் (3,4) - வடிவம்மா திரிகூடம் - தாழ்வாரம்:கூடம் = வடிவம்மா திரி ~ மாதிரி வடிவம்
18.கம்பு குத்த முடியாத குகை போய் கலந்து சமயம் (4) - கம்பு குத்த - குக (குகம்:குகை) = ம்புத்த ~ புத்தம்
நெடுக்காக:
1.ககரங்கள் நடுவில் ஒரு இறுதி சேர்ந்து தீயாத முடியாமல் (3) - க கா + ரு ~ கருகா
2.கோழை, முதல் இல்லா கோழை சேர்ந்து வாலுளுவை மூலிகைச்செடி (5) - கோழை:கபம். கபம் + பம் = கபம்பம்
3.படகு இல்லா தாமரையுடன் காப்பாற்று பெரிய (2) - படகு:கலம். கமலம் - கலம் = ம + கா:காப்பாற்று = மகா
4.கண்ட படி பிடிவாதம் வா சடுகுடு இல்லாமல் கலந்து அபராதம் வாங்கு (6) - கண்ட படி பிடிவாதம் - கபடி = ண்டபிடிவாதம் ~ தண்டம்பிடி
6.முடியாத வழியில் வட்ட மையம் சேர்ந்து அடிக்க (3) - வழி:தடம். தட + ட் ~ தட்ட
8.கொடு சிவனின் தலையை அடிமைப்பெண் (2) - கொடு:தா + சி = தாசி
9.தாளம் மகிமை கலந்து குறிக்கோளாம் (6) - தாளம்:லயம் + மகிமை:மாட்சி ~ லட்சியமா
10.மறுமலர்ச்சி எல்லைகளில் நசுக்கு (2) - மறுமலர்ச்சி = மசி
11.மலர் புருவம் கலந்து மொட்டு (5) - பூ + புருவம் ~ பூவரும்பு
13.இற நடுவில் ஒரு ஸ்வரம் சேர்ந்து முடியாத தோரணம் (3) - இற:மரி + க = மகரி - மகரிகை:தோரணம்
15.கை கலந்ததில் விதம் (3) - கை:கரம் ~ ரகம்
17.ஏற்ற இல்லாத மண்டூகம் தருவது கங்கணம் (2) - மண்டூகம்:தவக்களை - ஏற்ற:தக்க = வளை
பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
ராமராவ்
சசி பாலு
சந்தானம்
முத்து சுப்ரமண்யம்
சௌதாமினி சுப்ரமண்யம்
ராமசந்திரன் வைத்யநாதன்
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்
மாதவ் மூர்த்தி
சாந்தி
No comments:
Post a Comment