Tuesday, June 24, 2014

குறுக்கெழுத்து புதிர் - 5

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/


அன்பு நண்பர்களே,
இதோ எனது ஐந்தாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.



குறுக்காக:
1.சகளைக்காக எருது ஓடி தேய்க்க (4)
5.பெரிய பண்டிதர் அக்கா அரியர் இல்லாமல் கலங்கி பள்ளிக்கு செல்லாதவள் (5,2)
7.பாட்டுக்குள்ளே ஒரு ஸ்வரம் கூட்டி காடு (4)
8.அண்டம் தாவ அகரம் நீக்கி மாறுபட்டு நடனம் (5)
9.ஆதி போன அம்பலம் குழம்பிக் கொடுத்த செங்குத்துக்கோடு (4)
11.மலர் துவசம் இணைந்து பெண் பெயர் (4)
12.மகராசி சிரம் இருபத்தைந்தாம் ஆண்டு போய் ஒரு ராசி (5)
14.ஆதி அந்தமில்லா ஒரு சிகரம் சுவாரசியமான (4)
16.தாழ்வாரம் போன வடிவம்மா திரிகூடம் சிக்கலில் உதாரண உருவம் (3,4)
18.கம்பு குத்த முடியாத குகை போய் கலந்து சமயம் (4)

நெடுக்காக:
1.ககரங்கள் நடுவில் ஒரு இறுதி சேர்ந்து தீயாத முடியாமல் (3)
2.கோழை, முதல் இல்லா கோழை சேர்ந்து வாலுளுவை மூலிகைச்செடி (5)
3.படகு இல்லா தாமரையுடன் காப்பாற்று பெரிய (2)
4.கண்ட படி பிடிவாதம் வா சடுகுடு இல்லாமல் கலந்து அபராதம் வாங்கு (6)
6.முடியாத வழியில் வட்ட மையம் சேர்ந்து அடிக்க (3)
8.கொடு சிவனின் தலையை அடிமைப்பெண் (2)
9.தாளம் மகிமை கலந்து குறிக்கோளாம் (6)
10.மறுமலர்ச்சி எல்லைகளில் நசுக்கு (2)
11.மலர் புருவம் கலந்து மொட்டு (5)
13.இற நடுவில் ஒரு ஸ்வரம் சேர்ந்து முடியாத தோரணம் (3)
15.கை கலந்ததில் விதம் (3)
17.ஏற்ற இல்லாத மண்டூகம் தருவது கங்கணம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments:

Post a Comment