குறுக்கெழுத்துப் புதிர் 6-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மிக விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 7-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)
குறுக்காக:
1.குழம்பி மரபு குழம்பி செல்வந்தன் (5) - குழம்பி:காபி + மரபு ~ மகாபிரபு
4.எல்லாம் காவல் செய் குளியா (3) எல்லாம்:முழு + காவல் செய்:கா = முழுகா
6.வறுமை கொண்ட உறுதி (3) - வறுமை:தரித்திரம் = திரம்
7.அங்கு செத்தா உயிர் நீங்கி கலந்து நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையா (5) - அங்கு + செத்தா - அ = ங்குசெத்தா ~ செங்குத்தா
8.பாட்டி பாட்டிழந்து பழ சுற்றி தூளி (4) - பாட்டு:பா. பாட்டி - பா = ட்டி + பழ:தொல் ~ தொட்டில்
9.செல் மக்கள் உணவு (4) செல்:போ + மக்கள்:ஜனம் = போஜனம்
12.அணி நடுவில் சகரங்கள் சேர்ந்து மரவேலை செய்பவர் (5) - அணி:தரி + சகரங்கள்:ச்,சா,சா ~ தச்சாசாரி
14.கனிந்து மெய்யில்லாமல் சேதம் (3) - கனிந்து:பழுத்து - த் = பழுது
16.ஆகாய நதி கங்கை (3) - ஆகாயம்:வான் + நதி = வானதி
17.யாழ் நரம்புகள் கொண்ட யானைக்கூட்டம் (5) - யாழ் நரம்புகள்: தந்திகள், யானை:தந்தி = தந்திகள்
நெடுக்காக:
1.ஸ்வரம் நுழைந்த அறிவு வீணை (3) - அறிவு:மதி + ஸ்வரம்:க ~ மகதி
2.பேச்சு வழக்கில் நிறைந்து கல் குழப்பத்தில் குச்சியால் தரப்படும் தண்டனை (5) - நிறைந்து:ரம்பி + கல்:படி ~ பிரம்படி
3.சிரிப்பின் முன்பாதி பண்ணு மானாவரி பயிர் (4) - சிரிப்பு:புன்னகை, புன் + பண்ணு:செய் = புன்செய்
4.குமுறு திருகி திருகு (3) - குமுறு ~ முறுகு
5.முழுமையில்லா அழகு மனைவி ஒரு ஸ்வரம் (5) - அழகு:காந்தி. காந் +மனைவி:தாரம் = காந்தாரம்
8.அந்த கிணறா (பேச்சு வழக்கில்) அகரம் ஓடி கலந்து தொல்லையா (5) - அந்த - அ = ந்த + கிணறா:தொரவா ~ தொந்தரவா
10.கூட்டம் லாயம் இணைப்பில் வருவாய் தீர்வாயம் (5) - கூட்டம்:ஜமா + லாயம்:பந்தி = ஜமாபந்தி
11.ஸ்வரம் நுழைந்த தகரங்கள் அணிந்த (4) - ஸ்வரம்:ரி + தகரங்கள்:த,த்,த ~ தரித்த
13.இற மன்மதன் மனைவி புலவன் (3) - இற:சா + மன்மதன் மனைவி:ரதி = சாரதி
15.பந்து பல இறுதியில் தூசி (3) - பந்து பல : பந்துகள் = துகள்
பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
ராமராவ்
முத்து சுப்ரமண்யம்
சந்தானம்
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்
நாராயணன் ராமையா
ராமசந்திரன் வைத்யநாதன்
சசி பாலு
சௌதாமினி சுப்ரமண்யம்
நாகமணி ஆனந்தம்
பவளமணி பிரகாசம்
பாலாஜி
அருந்ததி
No comments:
Post a Comment