இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
அன்பு நண்பர்களே,
இந்த குறுக்கெழுத்து புதிர் எனது முதல் முயற்சி என்பதால் தயவு செய்து தவறுகளை மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஆதரிக்கவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
அன்பு நண்பர்களே,
இந்த குறுக்கெழுத்து புதிர் எனது முதல் முயற்சி என்பதால் தயவு செய்து தவறுகளை மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஆதரிக்கவும்.
|
குறுக்காக: 5.சந்தம், சிந்து, விருட்சம் அனைத்தையும் குறிப்பது இதுவே (2)
6.9-குறுக்காகவில் இருப்பது இதனால் கிளம்பியது/புறப்பட்டது (3,3)
7.ஒரு தானியத்தின் முன் பகுதியும் ஆப்பத்தின் பின் பாதியும் சேர்ந்து தூண். (4)
8.தேசத்தந்தையின் இடையில் நம் கடைசி சேர்த்தால் அரவம் (3)
9.மலருடன் மூச்சுப்பிடித்துக் கிடைத்த மரித்தவர்களின் உருவமா? (3)
11.கோணத்தை அளப்பதின் முன் பாதியில் துவக்கத்தின் ஆரம்பம் நுழைந்து இளையவன் சுமந்தது. (3)
13.ராசியான காளைமாடு (4)
16.முடியாத சிவனுடன் பக்குவம் சேர்ந்து ஒரு விளையாட்டு. (6)
17.நீரும் தூக்கலாம் நாணிலும் ஏற்றலாம் (2)
நெடுக்காக: 1.கொள்ளும் தின்னும் கண்ணின் மேலும் வில்லெனவிருக்கும். (4)
2.மயிலின் தொடக்கத்துடன் முதுமையும் மலரும் சேர்ந்து ஒரு புஷ்பம். (5)
3.சாதியின் பின்பாதிக்கு முன் ஒடி/கெடு சேர்த்து பெற்றது கடைசி (3)
4.படித்தும்(!) பெறலாம் காற்றிலும் விடலாம். (4)
10.மழைத்தாய் பெண் தெய்வம் (5)
12.நீட்டி முழக்காத பரிசுத்தத்துடன் ஆங்கில மது சேர்ந்ததால் கவலை. (4)
14.நிறைய நதி சேர்ந்து வெவ்வேறு விதமாய் (4)
15.மாட்டின் முன் தவளையின் முதல் சேர்த்து கடவுளை வழிபடு. (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
No comments:
Post a Comment