Wednesday, February 26, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 1 - பதில்கள்



குறுக்கெழுத்துப் புதிர் 1-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 2-ல் சிந்திப்போம்.

குறுக்காக:
5.சந்தம், சிந்து, விருட்சம் அனைத்தையும் குறிப்பது இதுவே (2) - தரு
6.9-குறுக்காகவில் இருப்பது இதனால் கிளம்பியது/புறப்பட்டது (3,3) - கிணறு வெட்ட
7.ஒரு தானியத்தின் முன் பகுதியும் ஆப்பத்தின் பின் பாதியும் சேர்ந்து தூண். (4) - கம்பு + ஆப்பம் = கம்பம்
8.தேசத்தந்தையின் இடையில் நம் கடைசி சேர்த்தால் அரவம் (3) = பாம்பு
9.மலருடன் மூச்சுப்பிடித்துக் கிடைத்த மரித்தவர்களின் உருவமா? (3) - பூதமா
11.கோணத்தை அளப்பதின் முன் பாதியில் துவக்கத்தின் ஆரம்பம் நுழைந்து இளையவன் சுமந்தது. (3) - பாகைமானி + து = பாதுகை
13.ராசியான காளைமாடு (4) - ரிஷபம்
16.முடியாத சிவனுடன் பக்குவம் சேர்ந்து ஒரு விளையாட்டு. (6) - பரமன் + பதம் = பரமபதம்
17.நீரும் தூக்கலாம் நாணிலும் ஏற்றலாம் (2) = வாளி

நெடுக்காக:
1.கொள்ளும் தின்னும் கண்ணின் மேலும் வில்லெனவிருக்கும். (4) - புருவம்
2.மயிலின் தொடக்கத்துடன் முதுமையும் மலரும் சேர்ந்து ஒரு புஷ்பம். (5) - மகிழம்பூ
3.சாதியின் பின்பாதிக்கு முன் ஒடி/கெடு சேர்த்து பெற்றது கடைசி (3) - இறுதி
4.படித்தும்(!) பெறலாம் காற்றிலும் விடலாம். (4) - பட்டம்
10.மழைத்தாய் பெண் தெய்வம் (5) - மாரியம்மா
12.நீட்டி முழக்காத பரிசுத்தத்துடன் ஆங்கில மது சேர்ந்ததால் கவலை. (4) - துயரம்
14.நிறைய நதி சேர்ந்து வெவ்வேறு விதமாய் (4) - பல + ஆறு = பலவாறு
15.மாட்டின் முன் தவளையின் முதல் சேர்த்து கடவுளை வழிபடு. (3) - தபசு

பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
பவளமணி பிரகாசம்
வாஞ்சிநாதன்
மாதவன் வரதாச்சாரி
முத்து சுப்ரமண்யம்
ராமராவ்
வடகரை வேலன்
யோசிப்பவர்
சுரேஷ் பாபு
ராஜேஷ்
சௌதாமினி சுப்ரமண்யம்
சந்தானம்
மாதவ் மூர்த்தி
நாராயணன் ராமையா
சாந்தி
சசி பாலு
மனு
ராமசந்திரன் வைத்யநாதன்
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்
நாகமணி ஆனந்தம்

No comments:

Post a Comment