Tuesday, June 17, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 4 - பதில்கள்



குறுக்கெழுத்துப் புதிர் 4-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மிக விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 5-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)

குறுக்காக:
1.தந்தை போல் கலக்கத்தில் பக்கத்தில் இருக்காதே(4,1) - தந்தை:அப்பா + போல் ~ அப்பால் போ
4.உலகம் சிங்கப்பூரின் தலையுடன் சேர்ந்ததால் பாரசீகமாக சுருங்கியது. (3) உலகம்:பார் + சி = பார்சி
6.பாசம் சிதைந்ததில் கிடைத்த நான்கு விரலளவு (3) - பாசம் ~ சம்பா
7.காமு சாவித்திரி இணைந்து விதியிழந்து கலந்ததால் லட்சணம் (5) - காமு + சாவித்திரி - விதி = காமுசாத்ரி ~ சாமுத்ரிகா
8.சிங்கத்துள் கத்தி தலை நீங்கி நுழைந்ததால் கோவேறு கழுதை (4) - சிங்கம்:அரி + த்தி ~ அத்திரி
9.வாலில்லா கிளி வகையுடன் சேர்ந்து வீடு (4) கி + வகை:ரகம் = கிரகம்
12.கையில் பீம்சிங்கின் முதல் பாதியை திருப்பிப் போட்டால் மிடுக்கு (5) - கை:கரம் + பீம் ~ கம்பீரம்
14.மதிப்பிற்குரிய குகனின் தலை இணைந்து முறுக்கு (3) - மதிப்பிற்குரிய:திரு ​+ கு = திருகு
16.ஆதியிழந்த அதர்மா கலங்கியதில் பெண்கள் (3) - தர்மா ~ மாதர்
17.ஆரம்பமில்லா கிழடு வயிற்றுடன் சேர்ந்து கலந்து கலங்கிடு. (5) - ழடு + வயிறு:கும்பி ~ குழம்பிடு

நெடுக்காக:
1.முடியாத கோட்டையுடன் ஒரு ஸ்வரம் சேர்ந்து முடியாத மன்னன் (3) - முடியாத அரண்:அர + ச = அரச
2.சித்தி தலையெடுத்து குழந்தையுடன் சேர்ந்து அய்யராத்துப்பெண் (5) - குழந்தை:பாப்பா + த்தி = பாப்பாத்தி
3.போ சாமிலி கலங்கியதில் பொய்க்கடவுள் (4) - போ சாமிலி ~ போலிசாமி
4.அம்பாரத்தில் பாதி உயரிய விருது (3) - அம்பாரத்தில் = பாரத்
5.கங்கா தலையெடுத்து தலையினுள் போட்டதால் ஒப்பனை (5) - ங்கா + தலை:சிரம் ~ சிங்காரம்
8.பெரியவள் காலிழந்து சமயத்துடன் சேர்ந்து அந்த நேரமா? (5) - பெரியவள்:அக்கா-கா=அக் + அந்த நேரமா: கணமா = அக்கணமா
10.யத்தனம் தயவில்லாமல் பேரழகியுடன் சேர்ந்து கலந்ததால் மாமணி (5) - த்னம் + ரதி ~ ரத்தினம்
11.முடிவில்லா அம்பாள் குமரன் தலை சேர்த்து அஸ்திரமாகு (4) - அம்பா + கு = அம்பாகு
13.பீர்பால் தலைமையில் தேசமில்லா தர்பார் சீனர் (3) - பீ + தர் = பீதர்
15.குன்றின் தலை குளத்துடன் இணைந்து கன்னம் (3) - கு + குளம்:மடு = குமடு

பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
பவளமணி பிரகாசம்
ராமராவ்
சசி பாலு
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்
யோசிப்பவர்
சௌதாமினி சுப்ரமண்யம்
மாதவன் வரதாச்சாரி
ராமசந்திரன் வைத்யநாதன்
முத்து சுப்ரமண்யம்
மனு
தமிழ்
வடகரை வேலன்

No comments:

Post a Comment